தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை நடிகர் விஷால் இருந்து வந்தார் என்பது தெரிந்ததே. ஆனால் திடீரென கடந்த 2019-ம் தமிழக அரசு தயாரிப்பாளர் சங்க பொறுப்புகளை தனி அலுவலர் மஞ்சுளா என்பவரிடம் ஒப்படைத்தது. இதனால் தயாரிப்பாளர் சங்க கணக்குகள் அனைத்தையும் தனி அலுவலரிடம் அப்போதைய பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு ஒப்படைத்தார்.
இதுகுறித்து விஷால் தரப்பினர் கூறியப்போது, டிஜிட்டல் முறையில் தயாரிப்பாளர் சங்க கணக்குகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட்டு நாங்கள் செய்த செலவுகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது என்றும் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் நலனுக்காக மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர்.