சுயம்வரம் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் ஹேம்நாக் மரணம் – திரையுலகினர் அஞ்சலி!
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (14:37 IST)
தமிழ் சினிமாவில் 10க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த ஹேம்நாக் பாபுஜி மரணமடைந்துள்ளார்.
ரஜினி நடித்த காளி மற்றும் கர்ஜனை ஆகிய படங்களையும் கின்னஸ் சாதனைப் படைத்த சுயம்வரம் படத்தையும் தயாரித்தவர் ஹேம்நாக் பாபுஜி. 76 வயதான இவர் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தியுள்ளார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள அவரது அபார்ட்மெண்ட்டில் அவரின் இறுதி மரியாதை நிகழ்வு நடக்க உள்ளது.