ஜெயிலர் படத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல பாலிவுட் நடிகர்!

திங்கள், 6 பிப்ரவரி 2023 (09:16 IST)
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ”ஜெயிலர்” படத்தில்  ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர்.

இவர்களோடு கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் சிவகுமார், மலையாளத்தில் இருந்து மோகன் லால், தெலுங்கில் இருந்து சுனில் என ஒவ்வொரு மொழியில் இருந்தும் ஏராளமான நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இப்போது ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜாக்கி ஷ்ராஃப் இருக்கும் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்