சிவகார்த்திகேயனோடு இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த நடிகை!

சனி, 30 ஜனவரி 2021 (17:46 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் டாக்டர் படத்தின் நாயகியான பிரியங்கா மோகனே நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழில் இன்னும் நடித்து ஒரு படம் கூட ரிலீஸாகாத நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரியங்கா மோகன். டாக்டர் படத்தில் நடித்த அவர் அந்த படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே சூர்யாவின் படத்தில் கமிட்டானார். இந்நிலையில் சூட்டோடு சூடாக இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். டாக்டர் படத்தில் அவரின் நடிப்புத் திறமை பிடித்ததை அடுத்து சிவகார்த்திகேயனே அவருக்கு அந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்