இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பியும், பழம்பெரும் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் இரண்டாவது மகனுமான பிரேம்ஜி அமரன் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறியப்படுபவர். அதுமட்டுமில்லாமல் அவர் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் சில படங்களில் பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில், 43 வயதாகும் பிரேம்ஜி அமரனுக்கு கடந்தாண்டு திருமாணமாகும் என அவரது தந்தை கங்கை அமரன் கூறியிருந்த நிலையில், இந்த புத்தாண்டில் பிரேம்ஜி அமரன் தன் சமூக வலைதள பக்கத்தில், இவ்வருடம் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.