வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தற்போது விறுவிறுப்பாக கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து பேசியுள்ள பிரேமலதா விஜயகாந்த் “விஜய் எங்கள் வீட்டில் ஒரு பிள்ளை போல். அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்துள்ளார். என் மகன் சண்முக பாண்டியன் நீங்கள்தான் அண்ணா எனக்கு சினிமாவில் முன்னுதாரணம்” எனக் கூறினார். விஜய் என் மூத்த மகனிடம் “அரசியலில் நீதான் எனக்கு சீனியர். நீ நன்றாக பேசுகிறாய். மீடியாவை சிறப்பாக எதிர்கொள்கிறாய்” என்று பாராட்டினார். என்னிடம் கேப்டன் சம்மந்தப்பட்ட காட்சிகள் பிரம்மாண்டமா வந்திருக்குமா என்றார்” என சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.