துருவ நட்சத்திரத்தில் பார்த்திபன் வில்லன் இல்லை: படக்குழுவினர் தகவல்

வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (20:50 IST)
கௌதம் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் துருவ நட்சத்திரம் படத்தில் பார்த்திபன் வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவர் வில்லனாக நடிக்கவில்லை.


 

 
துருவ நட்சத்திரத்தில் பார்த்திபன் நடிப்பது உறுதி. ஆனால், அது வில்லன் வேடமில்லை என படக்குழு கூறியுள்ளது. பிறகு? வித்தியாசமான ஒரு வேடமாம். 
 
துருவ நட்சத்திரத்தின் முதல் ஷெட்யூல் முடிவடைந்துள்ளது. விக்ரம் விஜய் சந்தர் படத்துக்கு போய்விட்டதால் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்