பிரசாந்தின் ‘அந்தகன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஞாயிறு, 15 மே 2022 (16:12 IST)
பிரசாந்தின் ‘அந்தகன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் பிரசாந்த் ‘அந்தகன்’ என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் அந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது
 
பிரசாந்த் நடிப்பில் அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அந்தகன்’, இந்த படத்தில் கார்த்திக் யோகிபாபு வனிதா விஜயகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன
 
இந்த படத்தின் ‘அந்தகன்’ ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை மாதம் ஒன்றாம் தேதி இந்தப் படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்