முழு நேர வில்லனாக முடிவெடுத்த பிரசன்னா

ஞாயிறு, 3 டிசம்பர் 2017 (20:07 IST)
‘திருட்டுப்பயலே 2’ படத்துக்கு கிடைத்துள்ள வெற்றியால், வில்லனாகத் தொடர்ந்து நடிக்க முடிவெடுத்துள்ளாராம் பிரசன்னா.

 
சுசி கணேசன் இயக்கிய ‘பைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரசன்னா. தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்த பிரசன்னாவுக்கு அப்படியொன்றும் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. 
 
ஆனால், மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘அஞ்சாதே’ படத்தில் வில்லனாக நடித்தார் பிரசன்னா. அந்தப் படம் மட்டுமின்றி, அவருடைய கேரக்டரும் பாராட்டப்பட்டது. அப்போதே வில்லனாகத் தொடர்ந்து நடித்திருந்தால், இன்றைக்கு முன்னணி நடிகராக இருந்திருப்பார் பிரசன்னா.
 
ஆனால், அவர் ஹீரோவாகவே தொடர, நிலையான இடத்தைப் பிடிக்க முடியாமல் அவஸ்தைப்பட்டு வருகிறார். இந்நிலையில், சுசி கணேசன் இயக்கிய ‘திருட்டுப்பயலே 2’ படத்தில் மறுபடியும் வில்லனாக நடித்துள்ளார் பிரசன்னா. இது அவருக்கு 25வது படம். இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு பாராட்டப்பட்டுள்ளதால், இனிமேல் வில்லனாகத் தொடர்ந்து நடிக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்