டிராபிக் ராமசாமி’ படத்தில் பிரகாஷ் ராஜ்

திங்கள், 25 டிசம்பர் 2017 (17:57 IST)
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கும் ‘டிராபிக் ராமசாமி’ படத்தில், முக்கிய வேடத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்.

 
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து, ‘டிராபிக் ராமசாமி’ என்றொரு படம் தயாராகி வருகிறது. டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார். அவருடைய மனைவியாக ரோகிணி நடிக்கிறார்.
 
விஜய் விக்ரம் இயக்கும் இந்தப் படத்தில், ஆர்.கே.சுரேஷ், உபாசனா, இமான் அண்ணாச்சி, அம்பிகா, சார்லஸ் வினோத், மோகன்ராம், தரணி, சேத்தன், அம்மு, பேபி ஷெரின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், கஸ்தூரி, மனோபாலா, மதன்பாபு ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றனர்.
 
இந்தப் படத்தில், அதிரடி போலீஸ் கமிஷனராக நடிக்க பிரகாஷ் ராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். ‘சமூகப் போராளியின் வாழ்க்கையைப் பற்றிய படத்தில் நடிப்பது பெருமை’ என பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். கபிலன் வைரமுத்து பாடல்கள் எழுத, பாலமுரளி பாலு இசையமைக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்