ஜெயில் படத்தில் அடுத்த பாடல் ரிலீஸ்… மாஸ்டர் இயக்குநர் பாராட்டு

செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (18:49 IST)
நடிகரும் இசை அமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் அவ்வப்போது தான் நடித்து வரும் படங்கள் மற்றும் இசையமைத்து வரும் படங்கள் குறித்த அப்டேட்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருவார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் ஜெயில் படத்தின் அடுத்த பாடலை அப்படத்தின் இயக்குநர் வசந்த பாலன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ஜெயில். இப்படத்தில் ஜிவி பிரகாஷ், ராதிகா, ரோனிட் ராய், கவுதம் குலாட்டி, சுதன்ஷூ பாண்டே, யோகிபாபு, பிரகாஷ்ராஜ், சூரி, ரோபோ சங்கர், பாபிசிம்ஹா, பிரேம்ஜி அமரன், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படல் லாக்டவுன் முடிந்தவுடன் வெளியாகும்
 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.இந்நிலையில் இன்று இப்படத்தில் அடுத்த பாடலை இயக்குநர் வசந்த பாலன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்பாடலுக்கு வசந்த பாலனைப் பாராட்டி டுவீட் பதிவிட்டுள்ளார்.

Good one sir! Congrats

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்