ரா.பார்த்திபன் இயக்கத்தில் பிரபுதேவா

புதன், 11 ஏப்ரல் 2018 (13:55 IST)
ரா.பார்த்திபன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் பிரபுதேவா.

 
‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் பிரபுதேவா. அதன்பிறகு சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் ‘தபாங்’ படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க இருக்கிறார். அதன்பிறகு, ரா.பார்த்திபன் இயக்க இருக்கிற படத்தில் நடிக்கிறார் பிரபுதேவா.
 
தற்போது ‘உள்ளே வெளியே’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் ரா.பார்த்திபன். சமுத்திரக்கனி இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படம் முடிந்ததும், பிரபுதேவா படத்துக்கான வேலைகளைத் தொடங்க இருக்கிறார் ரா.பார்த்திபன்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்