பிரபுதேவா, ரெஜினா படத்தின் முக்கிய அப்டேட்!

செவ்வாய், 23 நவம்பர் 2021 (17:45 IST)
பிரபுதேவா நடித்த பொன்மாணிக்கவேல் என்ற திரைப்படம் சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது
 
பிரபுதேவா ஜோடியாக ரெஜினா நடிக்கும் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
முதல் முறையாக பிரபுதேவாவுடன் ரெஜினா ஜோடி சேர்ந்து உள்ளதால் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்பதும் இந்த படத்தில் நாயகி ரெஜினாவுக்கு அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்