புதிய படத்தில் குங்ஃபூ மாஸ்டராக நடிக்கும் பிரபுதேவா
திங்கள், 6 பிப்ரவரி 2017 (16:32 IST)
தேவி படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா நடிக்கும் புதிய படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முண்டாசுப்பட்டியில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அர்ஜுன் என்பவரின் படத்தில் பிரபுதேவா நடிக்கிறார்.
எங் மங் சங் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் பிரபுதேவாவின் அப்பாவாக தங்கர் பச்சான் நடிக்க உள்ளார். மகன் புரூஸ்லீ போல் ஆக வேண்டும் என்று பிரபுதேவாவை சீனாவுக்கு அனுப்பி குங்ஃபூ கற்க வைக்கிறார். இது எல்லாமே உள்ளூரில் உள்ள சில பிரச்சனைகளை தீர்ப்பதற்காக.
சீரியஸ் படமா சிரிப்பு படமா என்று வகைப்படுத்த முடியாத இந்த கதையில்தான் பிரபுதேவா அடுத்து நடிக்கிறார். பிப்ரவரி 17 படப்பிடிப்பு தொடங்குகிறது.