சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் இணைந்த பிரபுதேவா!

செவ்வாய், 3 மே 2022 (09:11 IST)
சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் இணைந்த பிரபுதேவா!
சிரஞ்சீவி நடித்த 'ஆச்சார்யா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் லூசிபர் என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் ஆன ‘காட்ஃபாதர்’ என்ற படத்தில் தான் தற்போது சிரஞ்சீவி நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
 
தமன் இசையமைக்கும் இந்த படத்தில் தற்போது பிரபுதேவா இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் சிரஞ்சீவி மற்றும் சல்மான் கான் ஆகிய இருவரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆட உள்ள நிலையில் இந்த பாடலுக்கு நடன இயக்குனராக பிரபுதேவா பணிபுரிய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்