சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?
ஞாயிறு, 1 மே 2022 (08:05 IST)
சிரஞ்சீவி நடித்த ஆச்சார்யா திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது
ஒரு சில ஊடகங்கள் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கொடுத்து வந்த போதிலும் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
குறிப்பாக தெலுங்கு மாநிலங்களான தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் உலகம் முழுவதும் ஆச்சார்யா திரைப்படம் முதல் நாளில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
நேற்றும் இன்றும் உள்ள வசூலை சேர்த்தால் 100 கோடியை தாண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது
இந்த படத்தின் பட்ஜெட் 140 கோடி என்ற நிலையில் இன்று அல்லது நாளைக்குள் 140 கோடி வசூலை கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது