காவல்துறை ஆணையர் ரோலில் பிரபுதேவா; படத்தின் பெயர் என்ன தெரியுமா..?

சனி, 21 ஜூலை 2018 (11:20 IST)
நடிகர் பிரபு தேவா காவல்துறை உதவி ஆணையராக நடிக்கும் படத்திற்கு ‘பொன் மாணிக்கவேல்’ என பெயர் வைத்துள்ளனர். ஜெபக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 11ஆம் தேதி பூஜையுடன் துவங்கியது.
தமிழில் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் பிரபுதேவா முதல் முறையாக போலீஸாக நடிக்கிறார். இப்படத்தை ஏ.சி.முகில் இயக்குகிறார். இந்தப்படத்தில் நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடிக்கிறார். மேலும், சுரேஷ் மேனன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில்  நடிக்கின்றனர்.
 
இது குறித்து இயக்குநர் கூறுகையில,. என் சொந்த ஊரான சேலத்தில் பொன் மாணிக்கவேல் சில காலம் பணியாற்றினார். அவரின் நடவடிக்கையில் ஈர்க்கப்பட்டு எடுக்கப்பட்ட கதைதான் இது. அதனாலேயே தலைப்பும் இவ்வாறு உள்ளது என கூறியுள்ளார்.
 
தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் நடந்த சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக செயல்பட்ட ஐஜி பொன் மாணிக்கவேல். சிலை கடத்தல் வழக்கு மட்டும் அல்லாது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளால் புகழ்பெற்றவர்.
 
இந்நிலையில் பிரபுதேவா காவல்துறை ஆணையராக நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்