பாகுபலி படங்களில் நடித்த முடித்த பிரபாஸுக்கு திருமணம் செய்ய பெண் தேடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது பிரபாஸ் - அனுஷ்கா ஜோடி ரசிகர்களுக்கு பிடித்து போக சமூக வலைதளங்களில், இருவரும் நிஜ வாழ்க்கையில் ஜோடி சேர வேண்டும் என்ற கருத்து வலம் வந்தது.
பாகுபலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே அனுஷ்காவுக்கு திருமணம் நடக்க இருந்தது. ஆனால் பிரபாஸ் அனுஷ்காவிடம், பாகுபலி படத்தில் முழு கவனத்தை செலுத்துங்கள்; திருமணத்தை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினாராம். இதனால்தான் அனுஷ்காவின் திருமணம் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.