பவர் ஸ்டாருடன் முத்த காட்சி; அழுது அடம்பிடித்த நடிகை

செவ்வாய், 2 மே 2017 (14:50 IST)
பவர் ஸ்டார் ஹீரோவாக நடிக்கும் மோகனா படத்தில் முத்தக் காட்சியில் நடிக்க மறுத்து ஹீரோயின் அழுதுவிட்டாராம்.


 
ஆர்.ஏ.ஆனந்த் இயக்கத்தில் பவர் ஸ்டார் ஹீரோவாக நடிக்கும் படம் மோகனா. இதில் மொட்டை ராஜேந்திரன் வில்லனாக நடிக்கிறார். கேரளாவைச் சேர்ந்த கல்யாணி நாயர் ஹீரோயினாக நடிக்கிறார்.
 
கதைப்படி நாயகி பெயர்தான் மோகனா. கதையில் மொட்டை ராஜேந்திரன் கனவில் நாயகிக்கு முத்தம் கொடுப்பது போன்ற காட்சியை படமாக்க இயக்குநர் திட்டமிட்டாராம். இதைத்தொடர்ந்து பவர் ஸ்டாரும் தனக்கு முத்த காட்சி வேண்டும் என அடம்பிடித்தாராம்.
 
இதனால் நாயகி முத்த காட்சிக்கு மறுப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் அறைக்குள் சென்று கதறி அழுதுள்ளார். இதையடுத்து இயக்குநர் முத்த காட்சியை படத்தில் இருந்து நீக்கிவிட்டாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்