அண்மையில் இது தொடர்பாக பேசிய கதிர், " தளநதி 63 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். அவரது மிக தீவிரமான ரசிகன் நான். விஜய் அண்ணா என்னை படப்பிடிப்பின் போது உரிமையுடன் பாசமாக தம்பி என அழைப்பார். அவர் படப்பிடிப்புக்கு வந்தவுடன் உடலில் பாசிட்டிவ் வைப்ரேசன் ஏற்படும். முன்பு இருந்ததைவிட இப்போது இன்னும் இளமையான தோற்றத்தில் அழகாக இருக்கிறார் விஜய் அண்ணா" என தெரிவித்தார்.