போர்க்கண்ட சிங்கம்… மெஹா ஹிட் ‘விக்ரம்’ படத்தின் முதல் வீடியோ பாடல்…

சனி, 25 ஜூன் 2022 (14:58 IST)
விக்ரம் திரைப்படத்தின் போர்க்கண்ட சிங்கம் பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுவரை தமிழ் படங்கள் படைத்த பல வசூல் சாதனைகளை இந்த திரைப்படம் முறியடித்துள்ளது. கிட்டத்தட்ட திரையரங்குகள் மூலமாக 300 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என தகவல்கள் வெளியாகின்றன.

இந்நிலையில் இப்போது 25 நாட்களைக் கடந்துள்ள நிலையில் படத்தில் இடம்பெற்றிருந்த ‘போர்க்கண்ட சிங்கம்’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகியுள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்