கொரோனா வைரஸ் தாக்கத்தால் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளோம். இதனால் அவரவர் தங்களது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்து வருகின்றனர். நடிகர், நடிகைகளுக்கும் ஷூட்டிங் இல்லாததால் எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகின்றனர்.
ஆனால், சமீபத்தில் நடிகை பூஜா ராமச்சந்திரன் தனது 36வது பிறந்த நாளை கணவருடன் மாலதீவு கடற்கரையில் கொண்டாடினார். கணவருடன் பிகினி உடையில் எடுத்துக்கொண்ட ஹாட் புகைப்படமொன்றை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார்.