கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ள நிலையில் செப்டம்பர் 30ம் தேதி படம் ரிலீஸாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் பொன்னியின் செல்வனுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.