ஆனால் திரையுலகினருக்கு ரூபாய் 5 கோடி நன்கொடை கொடுத்து சூர்யா அதனை ஆஃப் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சூர்யாவின் மீது திரையரங்கு உரிமையாளர்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சூர்யாவின் இன்னொரு திரைப்படமும் போட்டியில் ரிலீஸ் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள்வந்தாள் என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழில் ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு வரும் 11ம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது. பங்கருதல்லி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகப் போவதாக சூர்யா சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் மேலும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது