பொங்கல் விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு: ஜி.வி.பிரகாஷ்!

செவ்வாய், 10 ஜனவரி 2017 (10:21 IST)
பொங்கல் விடுமுறை கட்டாயம் அல்ல என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. மேலும் கட்டாய விடுமுறை தினத்திலிருந்து பொங்கல் விடுமுறை நீக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



தமிழகத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். ஏற்கனவே  ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்நிலையில், மத்திய அரசின் இத்தகைய செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில்,  நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ்நாடு இந்தியாவில் தான் உள்ளதா? என்று கேள்வி எழுப்பி, தன்னுடைய கண்டத்தை தெரிவித்திருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்