பிங்க் ரிமேக் படப்பிடிப்பு- ஹைதராபாத் செல்லும் அஜித்

வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (17:25 IST)
பாலிவுட்டில் அமிதாபச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.




மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோவுடன் இணைந்து  தயாரிக்கிறார். தீரன் அதிகாரம் படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இப்படத்தை இயக்குகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். இந்த படத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுதவிர ஊடகவியலாளர் ரங்கராஜ் பண்டே, அஸ்வின்ராவ்,  சுஜித் சங்கர்  அர்ஜுன் சிதம்பரம் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.
 
ஆரம்பம் படத்தை  தொடர்ந்து அஜித்தின் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் பிங்க் ரீமேக் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் சென்னையில் நடந்த ஸ்ரீதேவியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் பங்கேற்ற அஜித், ஹைதராபாத் செல்கிறார். அங்கு 20 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பு கலந்து கொள்கிறார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்