இதற்கிடையில் எதிர்பாராத திருப்பமாக ரஜினி நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. இதனால் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவதால் தியேட்டர்கள் ஒதுக்குவதில் பிரச்சனை ஏற்படும். எனவே எதாவது ஒரு படம் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்டது. விஸ்வாசம் படத்தின் வியாபாரம் தொடங்கி விட்டதால் பேட்ட தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் சன்பிக்சர்ஸ் விடாப்பிடியாக பொங்கல் ரிலிஸில் குறியாக இருந்தது.
ஆனால் இதற்குள் விஸ்வாசம் படக்குழுவினர் பெரும்பாலான தியேட்டர்களைக் கைப்பற்றி விட்டதால் பேட்ட படத்திற்கு அதிகளவில் தியேட்டர்கள் கிடைக்காத சூழ்நிலை உருவானது. இதனால் படத்தை சன்பிக்சர்ஸ் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ்க்கு தமிழக விநியோக உரிமையைக் கைமாற்றி உள்ளனர். தமிழகம் முழுவதும் பெருவாரியான தியேட்டர்களை வாடிக்கையாளர்களாக வைத்துள்ள ரெட்ஜெயிண்ட் மூவிஸ் தியேட்டர் கைப்பற்றுவதில் மும்முரமாக இறங்கியுள்ளது.
இரண்டு படக் குழுவினரும் இரு வேறு பாணிகளில் விளம்பரங்களில் இறங்கி அடித்து வருவதால் பொங்கல் ரிசல்ட் எப்படி இருக்கும் என்பது இன்னும் சந்தேகமாகவே உள்ளது. பேட்ட படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிக்குமார், நவாஸுதின் சித்திக் போன்ற நாயக முகங்கள் இருப்பது கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது. ஆனால் விஸ்வாசம் படத்திற்கு இருக்கும் நாயக பிம்பம் என்பது அஜித் மற்றும் நயன்தாரா மட்டுமே. அதனால் பொங்கல் ரேஸீல் பேட்ட படம் அதிகளவில் பார்ப்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.