தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த 10ந் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஒன்றரை வருடங்களாக அஜித்தை திரையில் பார்க்காமல் இருந்த ரசிகர்கள் இன்று இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். குடும்பம் சம்மந்தமாக கதை என்பதால் குடும்பம் குடும்பமாக பலர் இந்த படத்தை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் நடித்திருக்கும் கமெடி நடிகர் தம்பி ராமையா, படத்தைப் பற்றி கூறும்போது டைவர்ஸ் பண்ண முடிவு செய்தவர்கள் தயவு செய்து ஒரு முறை ஒன்றாக சேர்ந்து விஸ்வாசம் படத்தை பாருங்கள், அந்த எண்ணமே அடியோடு போய்விடும் என உறுதிபட தெரிவித்தார்.