‘துருவ நட்சத்திரம்’ படத்தில் ‘லொள்ளு’ ரா.பார்த்திபன்

வெள்ளி, 23 ஜூன் 2017 (15:34 IST)
விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிவரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.




மலையாள நடிகர் பிருத்வி ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கெளதம் மேனனே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். நியூயார்க் மற்றும் குன்னூர் பகுதிகளைத் தொடர்ந்து, தற்போது ஸ்லோவேனியாவில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

இந்த ஷெட்யூலில், ரா.பார்த்திபனும் இணைந்துள்ளார். லொள்ளுவுக்கும், ஜொள்ளுவுக்கும் புகழ்பெற்ற ரா.பார்த்திபன், கடந்த சில படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறாரா அல்லது கேரக்டர் ரோலில் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை. இந்த ஷெட்யூல் முடிந்ததும், சென்னை மற்றும் துபாயில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்