இயக்குனர் பார்த்திபன் நடித்து இயக்கி கடந்த ஆண்டு வெளியான படம் “ஒத்த செருப்பு”. விமர்சன ரீதியாக வெற்றியடைந்த இந்த படம் வசூலில் தோல்வியை தழுவியது. தனது படத்திற்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என பார்த்திபன் வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், பார்த்திபனின் ஒத்த செருப்பு தேசிய விருதிற்கு தேர்வாகியுள்ளதாக செய்திகள் வெளியானது. அதை தொடர்ந்து திமுக பிரமுகர் ஒருவர் பார்த்திபன் பாஜகவில் இணைவதாக கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பார்த்திபன் “ஏற்கனவே இந்தியன் பனோரமாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை மத்திய அரசின் செய்தி அறிக்கை வெளியிட்டதை ’தேசிய விருதா’ய் ஊடகங்கள் கொண்டாடியதை புரிந்துக் கொள்ள முடிந்தது. உலகெங்கும் பாராட்டுக்கள். மணியோசை முன்னரே வந்துவிட்டது, யானை வரும் பின்னே! பின்னே வேறென்னச் சொல்லி சமாளிப்பது .?” என்று தெரிவித்துள்ளார்.