’ஒத்த செருப்பு’ படத்திற்கு விருது: கிண்டல் செய்த திமுக எம்பி

புதன், 21 அக்டோபர் 2020 (15:05 IST)
பார்த்திபன் இயக்கி நடித்த ’ஒத்த செருப்பு’  திரைப்படத்திற்கு மத்திய அரசு இன்று காலை விருது அறிவித்தது என்பது தெரிந்ததே 
 
மத்திய அரசின் பணமா விருது பெற்ற இயக்குனர் பார்த்திபனுக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரே ஒருவர் மட்டுமே நடித்து, தயாரித்து இயக்கி இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. உலகில் ஒரு சிலரே செய்துள்ள இந்த சாதனையை செய்துள்ள பார்த்திபனுக்கு மத்திய அரசு தகுந்த கௌரவம் கொடுத்து உள்ளதாகவே சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் அவர்கள் தனது டுவிட்டரில் ’ஒத்த செருப்பு’ படத்திற்கு மத்திய அரசு விருது வழங்கிய செய்தியை குறிப்பிட்டு, ‘அண்ணனுக்கு பாஜகவில் ஒரு சீட்டு பார்சல்’ என்று கூறியுள்ளார்
 
திமுக எம்பி செந்தில்குமார் அவர்களின் இந்த ட்விட்டிற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. மகா கலைஞனை டாக்டர் செந்தில்குமார் அவமானப்படுத்திவிட்டதாக  நெட்டிசன்கள் தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்