கே.எஸ்.ரவிக்குமார் - கமல் கூட்டணியில் உருவான காமெடி திருவிழாக்களில் அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம் ஆகியவை முக்கியமானவை.
முடிஞ்சா இவன புடி படம் குறித்து பேசிய கே.எஸ்.ரவிக்குமார், பஞ்சதந்திரம் படம் குறித்தும் குறிப்பிட்டார். அன்று அதனை விமர்சித்தவர்களும் ஸ்ட்ரெஸ் வந்தால் பஞ்சதந்திரம் படத்தைத்தான் பார்க்கிறார்கள் என்றார். பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஸ்கோப் உள்ளதாகவும் அவர் கூறினார்.