அந்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ! - தனுஷின் திடீர் முடிவால் ரசிகர்கள் ஹேப்பி!

வெள்ளி, 26 ஜூலை 2019 (14:35 IST)
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவரான நடிகர் தனுஷ் திரைத்துறையில் நுழைந்தது தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். 


 
நடிகர்,  பாடகர், பாடலாசிரியர் , தயாரிப்பாளர் , இயக்குனர் என அத்தனை அவதாரங்களையும் எடுத்து அதில் தொடர்ச்சியாக வெற்றி கண்டு வருகிறார். அந்தவகையில் இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் கடந்த 2017ம் ஆண்டு திரைக்கு வெளிவந்து சூப்பர் அடித்த படம் பவர் பாண்டி. இப்படத்தில் ராஜ்கிரண் மற்றும் ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை நிகழ்த்தியது. 
 
எனவே இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது எடுப்பீர்கள் என ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக தனுஷ் முடிவெடுத்துள்ளாராம். 
 
தனுஷ் தற்போது அசுரன் படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் வடசென்னை படத்தின் 2-ம் பாகத்தை வெற்றிமாறன் எடுக்க உள்ளார். பின்னர் புதுப்பேட்டை 2-ம் பாக படமும் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இனிவரும் நாட்களில் தனுஷ் இராண்டாம் பாக படங்களில் பிஸி ஆகிவிடுவார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்