வடிவேலை பார்த்து விஜய் சிரிப்பது போல ஜூலியை கலாய்த்த ஓவியா!

ஞாயிறு, 30 ஜூலை 2017 (15:40 IST)
ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு வார இறுதியில் நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். அப்படி நேற்று கமல் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுடன் பேசினார்.


 
 
அப்போது மீண்டும் ஓவியா, ஜூலி விவகாரம் விவாதிக்கப்பட்டது. அப்போது நடிகை ஓவியா ஜூலியை கிண்டலடிக்கும் விதமாக செம்மையாக சிரித்து அவரை வெறுப்பேற்றினார்.
 
கடந்த வாரம் ஜூலி சொன்ன பொய்யை கமல் வீடியோவில் போட்டுக்காட்டி அதனை அம்பலப்படுத்தினார். இதனால் ஜூலியின் பொய்யான முகம் அனைவருக்கும் தெரியவந்தது. இதனையடுத்து ஜூலி அந்த 5 செகெண்ட் முன்னாடி உள்ள வீடியோ வேண்டும் என புதிய நாடகத்தை போட ஆரம்பித்தார்.
 
ஜூலி மீண்டும் மீண்டும் பொய்யாக நடிப்பதால் ஓவியா ஜூலி மீது கடும் கோபத்தில் இருந்தார். இந்நிலையில் நேற்று கமல் ஜூலியிடம் அந்த 5 செகெண்ட் வீடியோ வேண்டும் என்றால் போட தயார் என்று கூறினார். வேண்டுமா ஜூலி என கமல் கேட்டதற்கு ஜூலி வேண்டாம் என்றார்.
 
இதனையடுத்து ஓவியாவால் சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தார். அனைவரும் அமைதியாக இருக்க ஓவியா மட்டும் விழுந்து விழுந்து சிரித்தார். பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலை பார்த்து விஜய் மீண்டும் மீண்டும் விழுந்து விழுந்து சிரித்ததை போல ஓவியா சிரிப்பை அடக்க முடியாமல் ஜூலியை பார்க்க பார்க்க மீண்டும் மீண்டும் சிரித்தார். இதனையடுத்து கமல் இப்படி ஏளனமாக சிரிக்க கூடாது என கூறினார். ஆனாலும் ஓவியாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்