"ஒரே பேச்சு ஒரே முடிவு"படத்தின் First Look போஸ்டரை இயக்குனர் பேரரசு வெளியிட்டார்

J.Durai

வெள்ளி, 12 ஜூலை 2024 (19:09 IST)
வாட்ஸ்அப் தொடர்பில் வரும் தொல்லைகளை விவரிக்கும் படமாகவும் செல்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரையும் எச்சரிக்கும் விதமாக *"ஒரே பேச்சு ஒரே முடிவு" திரைப்படம் உருவாகி உள்ளது.
 
ஆகஸ்டில் வெளியாக உள்ள இத்திரைப்படத்தில் தலைவாசல் விஜய், சம்பத் ராம், மீசை ராஜேந்திரன், கராத்தே ராஜா, புரூஸ்லீ ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
 
இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பேரரசு  வெளியிட்டு, கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை வாழ்த்தினார்.
 
இந்நிகழ்வில் ஸ்டண்ட் மாஸ்டரும் நடிகருமான புரூஸ்லீ ராஜேஷ், பிஆர்ஓ கோவிந்தராஜ் மற்றும் உதவி இயக்குனர் இந்து ஆகியோர் உடனிருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்