சிவகார்த்திகேயன் -விக்னேஷ் சிவன் படத்தில் நயன்தாரா?

வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (00:26 IST)
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்குவது விக்னேஷ் சிவன் என்பது உறுதியாகிவிட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இன்னும் ஒருசில மாதங்களில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



 
 
இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டு நாயகிகள் என்றும் அவற்றில் ஒருவர் நயன்தாரா என்றும் இன்னொருவர் குறித்த தகவல் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா ஏற்கனவே 'வேலைக்காரன்' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இந்த படத்திற்கு சிவகார்த்திகேயன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்குமே நெருக்கமான அனிருத் இசையமைக்கவுள்ளதால் இந்த படத்தில் அனிருத் வேற லெவலில் பாடல்களை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்