அஜீத்தை எருமை மாட்டுடன் ஒப்பிட்டு பேசி கொந்தளிப்பை ஏற்படுத்திய கே,ஆர்.கே!

செவ்வாய், 2 மே 2017 (10:47 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களின் வரிசையில் மாஸ் ஹீரோ தல அஜித். அவரின் திரைப்படம் வெளிவந்தால் கொண்டாட லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நேற்று அஜித்தின் பிறந்தநாளை ரசிகர்கள் மிக ஆரவாரத்துடன் கொண்டாடினர். இந்நிலையில் வட இந்திய பிரபலமான கே.ஆர்.கே, அவரது பிறந்தநாள் அன்று எருமைமாடு உடன் ஒப்பிட்டுள்ளார்.

 
தென்னிந்திய நடிகர்கள் பலரையும் தொடர்ந்து விமர்சித்துவரும் KRK இதற்குமுன் ரஜினியை அழகில்லாதவர் என்று கூறினார். அவரை எப்படி மக்கள் சூப்பர்ஸ்டாராக ஏற்றுக்கொண்டார்கள் என்றும் கூறியிருந்தார். சமீபத்தில் நடிகர் மோகன்லாலை சோட்டா  பீம் என கூறி சர்ச்சை சிக்கி, பிறல்லு மன்னிப்பும் கேட்டார்.
 
 
வட இந்திய பிரபலம் கமால் ஆர் கான் ட்விட்டரில் பதிவிட்டுள்ள இச்செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை  ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் கமால் ஆர் கானனை கழுவி ஊற்றி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்