விஜய் தற்போது மாஸ்டர் என்ற தனது 64 ஆவது படத்தில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் ஏப்ரல் மாதத்தில் ரிலிஸ் ஆக இருக்கிறது. இதையடுத்து அவரது அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்த படத்தை ஷங்கர் இயக்க இருப்பதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது. ஆனால் அதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தோன்றவில்லை.
ஷங்கர், இப்போது இந்தியன் 2 படத்தில் பிஸியாக இருக்கிறார். அதன் வேலைகள் முடிய இந்தாண்டு இறுதி வரை ஆகிவிடும். அதன் பின்னரே அவர் அடுத்த படத்தின் வேலைகளை ஆரம்பிப்பார். அவ்வளவு நாள் விஜய் காத்திருக்க வாய்ப்பில்லை எனவும் அதனால் வேறொரு இயக்குனர்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவார் எனவும் சொல்லப்படுகிறது.