விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் ஜெயம் ரவியின் இரண்டு நாயகிகள்

வெள்ளி, 25 ஜனவரி 2019 (06:35 IST)
ஜெயம் ரவி நடித்த 'டிக் டிக் டிக்' படத்தில் நாயகியாக நடித்த நிவேதா பேத்ராஜ், மற்றும் 'அடங்க மறு' படத்தில் நடித்த ராஷிகண்ணா ஆகிய இருவரும் விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளனர்.

சிம்பு நடித்த 'வாலு', விக்ரம் நடித்த 'ஸ்கெட்ச்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விஜய்சந்தர் அடுத்ததாக விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஹீரோவாக நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமாகையுள்ள நிலையில் இந்த படத்தின் படபிடிப்பு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நிவேதா பேத்ராஜ், ராஷிகண்ணா ஆகிய இருவரும் இணைந்துள்ளதாகவும், இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் தரும் கேரக்டர்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர். மேலும் இந்த படத்தின் காமெடி கேரக்டரில் சூரி நடிக்கவுள்ள நிலையில் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்