திட்டமிட்டபடி வெளியாகுமா சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’?

வியாழன், 16 நவம்பர் 2017 (13:04 IST)
சிவகார்த்திகேயன்  நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படம் திட்டமிட்டபடி ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


 
 
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘வேலைக்காரன்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை, ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.
 
இந்தப் படம் ஆயுத பூஜைக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், அஜித்தின் ‘விவேகம்’ ரிலீஸானதால் டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்றும் ரிலீஸாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 
காரணம், படத்தின் எடிட்டர் மாறியுள்ள நிலையில், இன்னும் எடிட்டிங் பணிகள் முடியவில்லை. அத்துடன், சென்சார் போர்டு ஒரு படத்துக்கு சான்றிதழ் அளிக்க 68 நாட்களாகும் என அறிவித்துள்ளது. ஆனால், இன்னும் 37 நாட்களே உள்ள நிலையில், சென்சார் சான்றிதழ் கிடைத்து படம் திட்டமிட்டபடி ரிலீஸாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்