இந்நிலையில் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நயன்தாரா ,ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி இன்று லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வருகிறார். அவரது உழைப்பு மற்றும் திறமை அவரை முன்னணி நடிகையாக நிலைநிறுத்தியுள்ளது. இடையே சில் சறுக்கல்களைச் சந்தித்தாலும் இன்று மற்ற நடிகைகளுக்கு முன்மாதிரியாக உள்ளார்.
தற்போது தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் , காத்துவாக்குல ரெண்டுகாதல், மற்றும் நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.