அதிரடியாக விலையை குறைத்தது நெட்பிளிக் – புதிய ப்ளான்கள் என்னென்ன?

செவ்வாய், 14 டிசம்பர் 2021 (12:27 IST)
உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் இந்தியாவில் தனது சப்ஸ்க்ரிப்ஷன் ப்ளான்களை மேலும் குறைத்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு ஓடிடி தளங்கள் மக்களிடையே புழக்கத்தில் இருந்தாலும் அதிகளவில் மக்களால் பயன்படுத்தப்படும் ஓடிடியாக நெட்ப்ளிக்ஸ் இருந்து வருகிறது. பல்வேறு படங்கள், வெப்சிரிஸ், நிகழ்ச்சிகளை வழங்கும் நெட்ப்ளிக்ஸ் சில ஆண்டுகள் முன்னதாக வாடிக்கையாளர்களை ஈர்க்க தனது சப்ஸ்க்ரிப்ஷன் ப்ளான்களில் மாற்றம் செய்து மாதம் ரூ.199க்கு மொபைலில் மட்டும் பார்க்கும் ப்ளானையும் அறிமுகம் செய்தது.

ஆனால் மற்ற ஓடிடி தளங்களான அமேசான், ஹாட்ஸ்டார் போன்றவை நெட்ப்ளிக்ஸை விடவும் குறைவான விலையில் ஆண்டு சப்ஸ்க்ரிப்ஷனை வழங்கி வருகின்றன. இதனால் தற்போது தனது அனைத்து பளான்களின் விலையையும் நெட்ப்ளிக்ஸ் குறைத்துள்ளது.

அதன்படி மொபைலில் மட்டும் பார்க்கும் சப்ஸ்க்ரிப்சன் மாதத்திற்கு ரூ.199ல் இருந்து ரூ.149 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அது போல மொபைல், லேப்டாப், டிவி என அனைத்திலும் லாக் இன் செய்து பார்க்கும் வசதி கொண்ட சப்ஸ்க்ரிப்சன் மாதத்திற்கு ரூ.449ல் இருந்து ரூ.199 ஆக அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் அதிகபட்சம் 480பிக்சல் குவாலிட்டி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது. அதிகபட்சம் 720 பிக்சலாவது கொடுத்தால்தான் டிவியில் பார்க்க வசதிபடும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்