விக்ரம் பிரபுவின் 'நெருப்புடா' சென்சார் தகவல்கள்

சனி, 22 ஜூலை 2017 (06:51 IST)
விக்ரம் பிரபு நடித்து வந்த 'நெருப்புடா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் சமிபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் நேற்று பார்த்து சான்றிதழ்கள் வழங்கியுள்ளனர்.

 
'நெருப்புடா' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் படக்குழுவினர் நிம்மதி அடைந்துள்ளனர். சென்சார் சான்றிதழ் வந்துவிட்டதால் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டு வாரங்களில் 'விஐபி 2' மற்றும் 'விவேகம்' ஆகிய படங்கள் வெளிவரவுள்ளதை அடுத்து இந்த படம் 3வது அல்லது 4வது வாரத்தில் வெளிவர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகவுள்ளது
 
விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, வருண், மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அசோக்குமார் இயக்கியுள்ளார். விக்ரம் பிரபுவின் சொந்த நிறுவனமான 'பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் சந்திரா ஆர்ட்ஸ் தயாரிக்கும் முதல் படமான இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்