இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்திஇல் அஜித்திற்கு ஜோடியாக முதன் முறையாக தமிழில் வித்யா பாலன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ‘பிங்க்’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் நடிக்கின்றனர். மேலும், அர்ஜுன் சிதம்பரம், ரங்கராஜ் பாண்டே, அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், இப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், சில விநியோகஸ்தர்கள் படத்தை கொஞ்சம் முன்பே ரிலிஸ் செய்ய சொன்னார்கள். அதனை கருத்தில் கொண்டு பிரபல நாளிதழுக்கு தயாரிப்பாளர் போனிகபூர் கொடுத்த பேட்டியில், படம் ஆகஸ்ட் 10ம் தேதிக்கு முன்பே திரைக்கு வரும் என்று கூறியுள்ளார்.