'நெஞ்சுக்கு நீதி’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வியாழன், 16 ஜூன் 2022 (15:49 IST)
உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் கடந்த மாதம் 20ஆம் தேதி வெளியான நிலையில் தற்போது ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் நெஞ்சுக்கு நீதி
 
 இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்றும் வசூல் திருப்திகரமாக இருந்ததாக டிரேடிங் வட்டாரங்கள் கூறின என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் ஜூன் 23ஆம் தேதி இந்த படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் போனிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்
 
இந்த படத்தை இதுவரை திரையரங்குகளில் பார்க்காதவர்கள் சோனிலைவ் ஓடிடியில் பார்த்துக் கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்