நீண்ட இடைவெளிக்கு பின்னர் செல்வராகவன் இயக்கி முடித்துள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிந்து சரியான ரிலீஸ் தேதிக்கு காத்திருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் செல்வராகவன் தனது டுவிட்டரில் இந்த படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என்று பதிவு செய்திருந்தார்
எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரபல இயக்குனர் கவுதம் மேனனின் 'ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவும், பிரசன்னா படத்தொகுப்பு பணிகளையும் செய்துள்ளனர்.