ஜெயிலர் இவ்வளவு பெரியதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கவில்லை: நெல்சன்

வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (15:31 IST)
சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் இன்று ஜெயிலர் வெற்றி விழா நடைபெற்ற நிலையில் அதில் பேசிய இயக்குனர் நெல்சன் ஜெயிலர் திரைப்படம் இவ்வளவு பெரிய வெற்றி பெற வேண்டும் என எடுக்கவில்லை என்றும் நினைத்ததை சரியாக எடுக்க வேண்டும் என்று மட்டுமே நாங்கள் திட்டமிட்டோம் என்றும் தெரிவித்தார். 
 
ரஜினிகாந்த் ரசிகர் தான் இந்த படத்தின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணம் என்றும் அவர்களுக்கு எனது நன்றி என்றும் இயக்குனர் நெல்சன் தெரிவித்தார். 
 
மேலும் ஜெயிலர் திரைப்படம் தயாரானதும் ரிலீசுக்கு மூன்று நாட்கள் முன்பு ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்தார் என்றும் படம் பார்த்து முடித்தவுடன் நான் அவரிடம் இந்த படம் எப்படி வந்திருக்கிறது என்று கேட்டபோது நான் நினைத்ததை விட படம் நன்றாக வந்திருக்கு என்று ரஜினிகாந்த் சொன்னார் என்றும் அது எனக்கு மனதிற்கு நிறைவாக இருந்தது என்றும் நெல்சன் தெரிவித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்