விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் ‘கனெக்ட்’… வெளியான முதல் லுக் போஸ்டர்!

செவ்வாய், 25 அக்டோபர் 2022 (09:16 IST)
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிகள் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதிகளுக்கு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அது தொடர்பான சர்ச்சைகள் இப்போது ஓய்ந்துள்ள குழந்தைகளோடு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து இருவரும் வீடியோ வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு நயன்தாரா, சத்யராஜ் மற்றும் வினய் நடிக்கும் கனெக்ட் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தை மாயா மற்றும் கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்குகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்