பேய்பட தயாரிப்பாளருக்கு நயன்தாரா அளித்த திகில் அனுபவம்

சனி, 5 மார்ச் 2016 (11:59 IST)
பிடிக்காத படங்களில் நடிக்க நடிகைகள் வைத்திருக்கும் பல டெக்னிக்குகளில் ஒன்று, சம்பளத்தை உயர்த்தி சொல்வது. இந்த ட்ரீட்மெண்டில் பல தயாரிப்பாளர்கள் பின்னங்கால் பிடரியில்பட ஓடியிருக்கிறார்கள்.


 
 
நயன்தாராவை ஆவி படம் ஒன்றில் நடிக்க வைக்க தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் அணுகியிருக்கிறார். நயன்தாராதான் நாயகி. எடுத்த உடனேயே, என்னுடைய சம்பளம் 4 கோடி என்று அவர் கூற, பேயடித்த எபெக்டில் அந்த இடத்திலிருந்து கிளம்பியிருக்கிறார் தயாரிப்பாளர்.
 
தெலுங்கில் நயன்தாரா 3 கோடிகள் சம்பளம் வாங்குவதாக கூறப்பட்டாலும், தமிழில் இரண்டு இரண்டரை கோடியை அவர் தாண்டவில்லை. வாய்ப்பை மறுக்கவே 4 கோடி என்று தடாலடியாக போட்டுத் தாக்கியிருக்கிறார்.
 
பார்த்து... கேட்கிறவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வரப்போகுது.

வெப்துனியாவைப் படிக்கவும்