நயன்தாரா படத்தின் பெயர் டோரா

செவ்வாய், 5 ஜூலை 2016 (14:36 IST)
நயன்தாரா நடிக்கும் புதிய படத்திற்கு டோரா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதனை அனிருத் அறிவித்துள்ளார்.


 
 
இயக்குனர் முதல் காப்பி அடிப்படையில் தயாரிக்க, தாஸ் ராமசாமி இயக்கும் படத்தில் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சென்ற வருடம் நயன்தாரா நடிப்பில் வெற்றி பெற்ற மாயா படத்தைப் போன்று இதுவும் ஒரு திகில் கதை. 
 
இந்தப் படத்தின் பெயரை இசையமைப்பாளர் அனிருத் இன்று அறிவிப்பதாக இருந்தது. அதன்படி, படத்தின் பெயரை அவர் வெளியிட்டுள்ளார். படத்திற்கு டோரா என பெயர் வைத்துள்ளனர்.
 
டோராவுக்கு அனிருத் இசையமைக்கவில்லை. விவேக் - மெர்வின் இரட்டையர் இசையமைக்கின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்